
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள் விழா
திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர
கே. என். நேரு அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ், இளங்கோ, கண்ணன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட அவைதலைவர் கோவிந்தராஜன் தலைமையிலும் மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் அன்பழகன் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட அலுவலகத்தில் உள்ள கொடிமரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வர்ண கொடியை முன்னேடி வன்ணை அரங்கநாதன்
ஏற்றினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா ,மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் ,மூக்கன், லீலாவேலு ,பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து சேர்மன்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவபடத்திற்கு நகர்மன்ற தலைவர் கீதா. மைக்கேல்ராஜ் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கீழையூர்
திருச்சி தெற்கு மாவட்டம் கீழையூர் கிராமம் மணப்பாறை ஒன்றியம்
கீழையூரில் ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாநகர துணை செயலாளர் ஜாஜகான் தலைமையில் அன்பழகன் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொட்டியம்
தொட்டியத்தில் உள்ள முசிறி சட்டமன்ற அலுவலக முன்பு நடந்த விழாவில் விழாவில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல் ,திருஞானம், ஒன்றிய குழு பெருந்தலைவர் கிருஷ்ணவேணி,
பேரூராட்சி செயலாளர் விஜய் ஆனந்த், தலைவர் சரண்யா பிரபு ,துணைத் தலைவர் ராஜேஷ், கவுன்சிலர் சம்பூர்ணம் ராமையா சுகுணா குமாரி ராஜசேகர், பழனிவேல் மாவட்ட பிரதிநிதி பத்மநாதன், மாவட்ட விவசாய அணி பெரியண்ணன் ,மாவட்ட பிரதி மகேந்திரன், கிளைச் செயலாளர் செட்டியா ,துணை செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் ஞானவேல் ,மாவட்ட பிரதிநிதி குருமூர்த்தி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வையாபுரி மாவட்ட கலை இலக்கிய அணி வரதராஜபுரம் மகாமணி ,மணமேடு சண்முகம் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
