
இளம்பெண் தற்கொலை
தொட்டியம் புளியம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் பிரியா(22) இவருக்கும் கரூர் மாவட்டம் செண்பகுளத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நாமக்கல்லில் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரபாகரன்,கடந்த பத்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.
இதனால் பிரியா தனது அண்ணனிடம் தனது கணவர் வராததை கூறி புலம்பியபடி இருந்தார்.
கடந்த 15-ஆம் தேதி இரவு பிரியா வாந்தி எடுத்தார்.
இதைகண்ட அவரது அண்ணன் ,பிரியாவிடம் கேட்ட போது வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.
தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா நேற்று சிகிச்சை பலனின்றி
இறந்தார்.
தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
