
பூட்டிய வீட்டில் திருட்டு
நம்பர் ஒன் டோல்கேட் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் இனிகோ ( 42).
இவர் மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டை பூட்டி விட்டு டோல்கேட்டில் உள்ள தனது கடைக்கு சென்றார்.

பின்னர் மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கரை சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து இனிகோ புகாரின் பேரில் கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
