
போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
திருச்சி மாவட்டம் ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் தமிழக அரசின் கலைத் திருவிழாவில் திருச்சி மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் “நீயா நானா” என்றத் தலைப்பில் நடந்த பட்டிமன்றப் போட்டியில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்குபெருமை தேடித் தந்தனர் .
வட்டார கல்வி அலுவலர் சேகரின் ஒப்புதலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் படி ஆசிரியர் ராஜா மற்றும் பள்ளி மாணவிகள் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த கோபிகா, தீபாஸ்ரீ, கிரி, மகிஷ் ஏழாம் வகுப்பு மாணவி கனிஷ்கா ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர்.இவர்கள் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
பட்டிமன்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும். ஆசிரியைகள் பெற்றோர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
