
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட இணைச் செயலாளர் தவ்லத் உஷேன் கான், மாவட்ட துணைத்தலைவர் சையது சுல்தான் மக்தூம், மாவட்ட செயலாளர் ராமதாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
