
லோடுமேன் பலி

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளத்தை சேர்ந்தவர் பன்னீா்செல்வம் (50). சுமை தூக்கும் தொழிலாளி. பாய் கடை சந்து பகுதியில் உள்ள தனியாா் மளிகைக் கடை கிடங்கில் பருப்பு மூட்டைகளை தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, பருப்பு முட்டைகளுக்கு எதிா்புறம் உயரமாக அடுக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து பன்னீா்செல்வத்தின் மீது விழுந்தது. இதில், மூச்சுத்திணறி பன்னீா்செல்வம் உயிரிழந்தாா்.காந்தி மார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர்.
