
ரோந்து போலீசாருக்கு வாகனங்கள் வழங்கல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு , வழிப்பறி , கொலை , கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் வாகன விபத்துகளில் காயமடையும் நபர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி அவர்கள் உயிர்களை காக்கும் வகையிலும் தனியாக இரண்டு ரோந்து போலீசாரை நியமித்து அவர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தி இருந்த
இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டாகப் பிரித்து 24 மணி நேரமும் , சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட 2 போலீசாரை நியமித்து அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழங்கினார்.
எந்த இடத்திலும் , எந்த நேரத்திலும் குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் உடனடியாக பயமின்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
