
வீட்டை காலி செய்ய மிரட்டல்

திருச்சி மாவட்டம் முசிறி அபிராமி தெருவில் குடியிருப்பவர் சந்திரா வயது 61. இவர் செல்வம் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டு உரிமையாளர் செல்வம் அவரது மனைவி லதா மற்றும் சுரேஷ் ஆகியோர் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லி சந்திராவை கீழே தள்ளி கைகளால் தாக்கினர்.
சந்திரா கொடுத்த புகாரின் பேரில் செல்வம் அவரது மனைவி லதா மற்றும் சுரேஷ் ஆகிய மூவர் மீது முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
