
அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கப்பட உள்ள நிகழ்ச்சயை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே. என் நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மேயர் அன்பழகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,
துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
