
சபாஷ் கருணாகரன்…
தொடரட்டும் உங்கள் பணி…
பொதுவாக நாம் வெளியூர் செல்லும் போது அந்தந்த பேருந்து நிலையங்களில் ஒரு மைக் செட் ஓடிக்கொண்டே இருக்கும் .
அதில் யாரோ ஒருவர் “அம்மா கவனமா இருங்க “…*அம்மா கவனமா இருங்க” “பஸ்ஸில் பொருட்களை வைக்காதீங்க” “இறங்காதீங்க” “திருடர்கள் ஜாக்கிரதை” “பிட்பாக்கெட் ஜாக்கிரதை “என்று
விளம்பரம் செய்து கொண்டே இருப்பார்.இதை நாம் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் பார்த்து இருக்கிறோம்.கேள்வி பட்டிருக்கிறோம்.
ஆனால் திருச்சியை சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வித்தியாசமான முறையில் அணுகியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராக தற்போது பொறுப்பு வகிப்பவர் கருணாகரன் இவர் இந்த நிலையத்துக்கு இன்ஸ்பெக்டர் அல்ல.
இவர் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
பாலக்கரை இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால் இவர் கூடுதல் பொறுப்பில் இங்கே வந்திருக்கிறார்.

இன்று 20ம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் பாலக்கரையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளை வரிசையாக ஆய்வு செய்து அனுப்பிக்கொண்டே இருந்தார்.
திடீரென ஒரு பேருந்தில் ஏறிய அவர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பிரச்சாரத்தில், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம் நான் பாலக்கரை இன்ஸ்பெக்டர் கருணாகரன் என்று தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டார்.
இந்த தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு பயணிகளின் அஜாக்கிரதையும் காரணமாக இருக்கிறது.
நீங்கள் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது கவன சிதறல் ஏற்பட்டு நிறுத்தத்தில் இறங்கி விடுகிறீர்கள்.
இதற்கிடையே உங்கள் பைகளில் இருந்த பொருள்களை யாராவது திருடிவிட்டால் உங்களுக்கு அது தெரிவதில்லை .
இது குறித்த புகாரை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் மூன்று நான்கு ஸ்டேஷனுக்கு அடைய வேண்டி வரும். காணாமல் போனது எந்த இடம் என்று முதலில் போலீஸ்காரர்கள் விசாரிப்பார்கள். நீங்கள் இடத்தை சொன்னால் அது எங்கள் லிமிட் இல்லை என்று வேறொரு போலீஸ் ஸ்டேஷனை கை காட்டுவார்கள். அங்கு சென்றால் அவர்கள் எங்கள் லிமிட் இல்லை என்று மற்ற நிலையத்தை கை காட்டுவார்கள்.
இப்படியே நீங்கள் அலைந்து கொண்டே தான் இருப்பீர்கள்.எனவே நீங்கள் உஷாராக இருங்கள். அதேபோல ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு யாரையும் உதவிக்கு கூப்பிடாதீர்கள். அரசு பஸ்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் உடமைகளை டாப்பில் வைத்துவிட்டு கீழே இறங்காதீர்கள்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் கருணாகரன் பயணிகளுக்கு அறிவுரையாக சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பேசினார்.இந்த பேச்சை பாலக்கரையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்து பயணிகளும் கைத்தட்டி வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த அளவு இறங்கி வந்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆச்சரியம்…. போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றாலே ஒருவித முறைப்புடன் இருப்பார்கள் ….ஆனால் இந்த இன்ஸ்பெக்டர் இந்த அளவு இறங்கி வந்து பயணிகளோடு பயணியாக தன்னை ஒரு இன்ஸ்பெக்டர் என்பதை மறந்து பிரசாரம் செய்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
