படைப்பாக்கம் என்பது தமிழ் மொழியின் தனித்துவம் செயின்ட் ஜோசப் கல்லூரிப் புலத்தலைவர் பெருமிதம்.

படைப்பாக்கம் என்பது தமிழ் மொழியின் தனித்துவம் செயின்ட் ஜோசப் கல்லூரிப் புலத்தலைவர் பெருமிதம்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் படைப்பாக்கத் தொடர்பியல் என்னும் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.சலேத் வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தலைமை வகித்து அறிமுகவுரையாற்றினார்.


கல்லூரி அகத்தர மதிப்பீட்டு குழுவின் புலத் தலைவர் முனைவர் அ.ரோஸ் வெனிஸ் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் தமிழ்த்துறையில் மதிப்புக் கூட்டுப் பாடம் உள்ளிட்ட பல வகுப்புகளைக் கல்லூரி நேரம் கடந்து, மாணவர்களுக்கு நடத்தி வருவது மன நிறைவை அளிக்கிறது. அதே வேளையில் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாக அடையாளம் கண்டு அவற்றைப் படைப்புகளாக வெளியிடக் களம் அமைத்துத் தரும் வகையில் படைப்பாக்கத் தொடர்பியல் என்கிற சான்றிதழ் வகுப்பை இன்று தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்புகள் என்பது தமிழனின் தனித்துவம் என்றாலும் கூட அதைவிட கூடுதலானது படைப்பாக்கம் என்பதே ஆகும். ஒவ்வொரு மாணவரும் தங்களின் படைப்பாக்கத் திறனை வளர்த்துக் கொள்வது நாளைய சமூகத்தைத் தாங்குவதற்கான தூண்களாக உருவாவதற்கு வழிவகுக்கும். எனவே தமிழ்த் துறையின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன் என்று கூறி நிறைவு செய்தார்.


பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு சீனிவாசன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி ச.மதுமிதா தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் பாக்கிய செல்வரதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பிறதுறை மாணவர்கள், தமிழ்த் துறை மாணவர்கள் சான்றிதழ் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
