NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் இலவச நூலகம் நடத்தி வரும் குடும்பத்தினர்

0
1

திருச்சியில் இலவச நூலகம் நடத்தி வரும் குடும்பத்தினர்

ஏழை, எளிய மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு தேவையான நூல்கள், அன்றாட தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், பருவ இதழ்களை படித்து பயன் பெறும் வகையில் திருச்சி, புத்தூர், பிஷப் குளத் தெரு பகுதியில் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா, கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்ப சகிதமாக இலவச நூலகத்தினை நடத்தி வருகிறார்கள்.

“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்கின்றார் ஒளவையார். எந்தளவிற்கு நூல்களை படிக்கின்றோமோ அந்தளவிற்கு நமது அறிவு விருத்தி அடையும்.

அத்தகையக அறிவை அளிக்கக்கூடிய நூல்கள் நிறைந்திருக்கும் நூலகத்தினை தனி நபர்க்கும், சமுதாயத்திற்கும் பயனளிக்கக் கூடிய வகையில் அமைத்துள்ளனர்.

நூலகம் குறித்து சமூக ஆர்வலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் பேசுகையில்,

3

“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது என்பர்.

4

மனிதனை சிறந்த முறையில் வழி நடத்துவதில் நூல்களிற்கு அளப்பரிய பங்கு உண்டு.
நல்ல நூல்களை வாசிப்பதனால் ஒருவர் பண்படுகிறார், பக்குவம் அடைகிறார்.

ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல் நூலகம் இல்லா ஊரில் குடியிருப்பதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில்
நூல்கள் அறிவை வழங்குவதோடு, ஒருவரது வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒவ்வொருவரும் அவர் தம் வீட்டில் சிறிய நூலகம் அமைத்திருப்பது சால சிறந்தது ஆகும்.

ஆனால் அனைத்து வகையான நூல்களையும் வாங்கி சேமிப்பதென்பது இயலாத காரியம். அதற்கு பொருளாதாரமும், இடவசதியும் தேவைப்படும்.
அவ்வகையில் நூல்களினை, வாங்கியும் நண்பர்கள் வழங்கிய நூல்களை கொண்டும் சுமார் ஏழாயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தை வடிவமைத்துள்ளோம்.
இல்லத்தின் தரைத் தளத்தில் நூலகம் அமைத்துள்ளதை பாராட்டி ரோட்டரி சங்கத்தினர் பாராட்டி உள்ளனர்.

குழந்தைகளிற்கு சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். சிறுவர்களிற்கான நூலகத்தை அமைத்து சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை தூண்டும் போது அவர்களிற்கு அறிவு ரீதியான தேடல் அதிகரிக்கின்றது.
பெரியவர்களுக்கும், வீட்டிலுள்ள பெண்களுக்கும் உலகத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நூலகம் வழிவகுக்கின்றது.
வாசிப்பவர்கள் தமக்கு தேவையான நூல்களை எளிதாக தெரிவு செய்து வாசிக்க இலகுவாக அமையும் வகையில் வைத்துள்ளோம்.

அனைத்து விதமான புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் கையேடுகளை வைக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமாக உள்ளது. தற்போது உடல்நலம், ஆரோக்கியம், அறிவியல், ஆன்மீகம், கலை, கலாச்சாரம், கதைகள், தன்னம்பிக்கை நூல்கள், இயற்கை மருத்துவம், யோகா, தியானம் சட்டம் உட்பட பல்வேறு நூல்களை நூலகத்தில் சேமித்து வைத்துள்ளோம்.
இன்றைய தொழில்நுட்ப பயன்பாட்டால் நூலகத்திற்கு வருகை புரிந்து நூல்களை வாசிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

இணைய வழியாக அனைத்து கருத்துக்களையும் செய்திகளையும் அறிந்து வருகிறார்கள் என்றார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.