திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

இன்று(23-12-22)சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் உள்துறை அமைச்சர் காமராஜரின் மனசாட்சி தியாக சீலர் ஐயா கக்கன்ஜி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும்,மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி பொதுச்செயலாளர்கள் ஜி எம் ஜி மகேந்திரன் திலகர் நாச்சிகுறிச்சி அருண் பிரசாத் திம்மை செந்தில் குமார் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல் சேவா தல தலைவர் அப்துல் குத்தூஸ் இளைஞர் காங்கிரஸ் முகமது ரபிக் கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் வார்டு தலைவர்கள் பாலக்கரை மாரியப்பன் சம்சுதீன் வழக்கறிஞர் பிரிவு கோகுல் நிர்மல் குமார் மாரிமுத்து மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
