
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்மஸ் விழா.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் தங்களது இல்லங்களிலும் நிறுவனங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதன்படி திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட Esskay Design & Structers company Director LATHA பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் .விழாவை ஒட்டி கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
