
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 98 ம் ஆண்டு அமைப்புதினம்.

தோழர். R.N.K97ம் ஆண்டு பிறந்த தினம். AITUC மூத்த தலைவர் K.T.K அவர்களின் நினைவு தினம் நிகழ்ச்சிகளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட இந்திய.கம்யூ. கட்சி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் S.சிவா தலைமையில் கட்சி கொடியினை மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் கொடியேற்றிவைத்தார்கள். K.T.K தங்கமணியின் படத்திற்கு வி.தொ.ச.மாவட்ட செயலாளர் P.கணேசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் AITUC மாவட்ட பொது செயலாளர்க. சுரேஷ் 29ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் இடைக்குழு. பகுதி குழு செயலாளர்கள்.மாவட்ட குழு உறுப்பினர்கள். வெகுஜன அமைப்பின் செயலாளர்கள் உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்துகொண்டார்கள். முடி வில் மாவட்ட துணைசெயலாளர் C. செல்வகுமார் நன்றி கூறினார்கள். கிழக்கு பகுதி கல்யாணசுந்தரபுரத்தில் தோழர்.O.R. Shri Raman நினைவு தினத்தையொட்டி படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் 2 இடைக்குழு, 5 பகுதி குழுக்களிலும் மொத்தம் 41 இடங்களில் கொடியேற்று விழாவும், 142 தோழர்களும் கலந்துகொண்டார்கள்.
