
மணப்பாறையில் “பேசும் கலை” 2-ஆம் நாள் அமர்வு துவக்கம்.
தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் தமிழ் வளர்மையம் ஒருங்கிணைப்பில், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நடத்தும் “பேசும் கலை” ஓராண்டுப் பட்டயப் படிப்பின் 2-ஆம் நாள் அமர்வு மணப்பாறை சௌமா பப்ளிக் பள்ளியில் இன்று தொடங்கியது.

பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் பொருளாளர் பாவலர் தாழை ந.இளவழகன் அவர்கள் தமிழ் வணக்கப் பாடலைப் பாடினார். தொடர்ந்து வள்ளுவர் வணக்க நிகழ்வில் பங்கேற்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் சதீஸ் அவர்கள், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் மாணவர்கள் மலர் தூவி திருவள்ளுவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஆநிறைச்செல்வன் என்ற சதீஸ் அவர்கள் “பேசும் கலை” வகுப்பு நடத்தினார்கள்.

நிகழ்வை பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.சண்முகம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
– பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை
