
துறையூரில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் . திடீர் சாலை மறியல் .
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் துவங்கி மே மாதம் வரை மறைமுக பருத்தி ஏலம் நடைபெறும். இதில் விவசாயிகள் தங்களது பருத்திகளைக் கொண்டு வந்து, ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் மறைமுகஏல முறையில் வியாபாரிகளிடம் விற்பனை செய்வது நடைமுறை. அதன்படி நேற்று (27-ந் தேதி) துறையூர் பகுதிகளான சிக்கத் தம்பூர், வெங்கடேசபுரம்,T களத்தூர், எரகுடி, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தி பெறப்பட்டது .இதனை ஏலத்தில் எடுக்க சேலம், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, கும்பகோணம், ஆத்தூர் , பண்ருட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ 75 – 69 பைசாவுக்கு பருத்தி ஏலம் போனது .இதில் அதிருப்தியடைந்த விவசாயிகள் சென்ற வருடம் ரூ 140-க்கு ஏலம் போனதை சுட்டிக்காட்டி இந்த முறையும் அதே தொகை கிடைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேற்று கிலோ ஒன்றிற்கு 63 ரூபாயில் இருந்து 64 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் கேட்டனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரியிடம் கூடுதல் விலை கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் அப்போது அதிகாரிகள் விவசாயிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் துறையூர் உப்பிலியபுரம் கொப்பம்பட்டி புலிவலம் உள்பட துறையூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென்று திருச்சி துறையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் அப்போது விவசாயிகள் பருத்திக்கு கூடுதல் விலை தருமாறு அறிவுறுத்தினார்கள் இதன் பின்பு பஸ் மறியலைக் கைவிட்டு அலுவலகத்திற்கு சென்று அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள் . இ
தனால் நேற்று நடைபெறவிருந்த பருத்தி ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி – 3 ந் தேதி பருத்தி ஏலம் நடைபெறும் என துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தங்கதுரை கூறினார்.விவசாயிகள் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
