
வேப்பமரத்தடியில் இறந்து கிடந்த ஆண் நபர் நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்

திருச்சிராப்பள்ளி புத்தூர் ஈவேரா சாலை எஸ் பி சி ஏ காம்ப்ளக்ஸ் புத்தூர் திறந்தவெளி கிளை நிலவரம் முன்பு வேப்பமரத்தடியில் ஆதரவற்ற ஆண் நபர் இறந்துள்ளார். தகவல் அறிந்த திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் விசாரிக்கையில் இறந்த நபர் அன்னதானம் வழங்கக்கூடிய இடங்களில் உணவு வாங்கி உண்டு ஜீவனம் நடத்தி வந்துள்ளார். பெயர் விலாசம் தெரியாத நபரின் பிரேத உடலை யாரும் உரிமை கூறாத நிலையில் இருந்துள்ளார். உரிமைக் கோரப்படாத பிரேத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாசிரியர் விஜயகுமாருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்
