
திருச்சி செயின்ட் மேரிஸ் பள்ளியில் கதை சொல்லும் போட்டி!
திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு மற்றும் தனித்திறமையை வளர்க்கும் விதத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் எடுத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது

இந்த வகையில் நேற்று பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
