
திருச்சியில் ரூபாய் 95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே. என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் செயல்பாட்டினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (06.01.2023) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார். இ.ஆ.ப., அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.இரா. வைத்திநாதன்.இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.சௌந்தர பாண்டியன், திரு.செ. ஸ்டாலின் குமார், திரு.நா.தியாகராஜன் திரு.எம்.பழனியாண்டி, திரு சீ.கதிரவன், மாநகராட்சி துணை மேயர் திருமதி.ஜி. திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.த. ராஜேந்திரன், மாநகராட்சி நகர பொறியாளர் திரு.பி. சிவபாதம், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
