திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் 25 ஆம் வெள்ளி விழா !

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் 25 ஆம் வெள்ளி விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு.S. ஆரோக்யராஜ், பாளையங்கோட்டை மேனாள் ஆயர் A. ஜுடு பால்ராஜ், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு.தாமஸ் பால்சாமி, திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு ட. அந்துவான், புதுக்கோட்டை திலகவதியார் ஆதீனம் சந்திரசேகர சுவாமிகள், கல்லூரியின் செயலர் அருள் பணி. லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் முனைவர் ப. நடராஜன் . முன்னாள் மாணவர் நாட்டுப்புறப் பாடகர் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல் கச்சேரி நடைபெற்றது.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் எழுதிய “சுரதாளக் குறிப்புகளுடன் சித்தர் பாடல்கள்” நூல் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடனத் துறைத் தலைவர் முனைவர் சாராள் அவர்கள் எழுதிய “விவிலியத்தில் நடனச் செய்திகள்” நூல் மற்றும் குறுவட்டு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடனத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சகாயராணி எழுதிய “படம் பார்த்து பரதம் படி ” என்கிற நூல் மற்றும் குறுவட்டு வெளியிடப்பட்டது. மற்றும் முனைவர் லலிதாம்பிகை எழுதிய “சுந்தரர் பாடல்களில் பரத மார்கம் புதிய பார்வை நூல் மற்றும் குறுவட்டு வெளியிடப்பட்டது.


கல்லூரியின் செயலர் அருள் பணி. லூயிஸ் பிரிட்டோ வரவேற்புரையாற்றினார், முதல்வர் நன்றியுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் வெள்ளி விழா நிகழ்வில்
தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் ஆம்புரோஸ் அடிகள் , மேதகு திருச்சி மறைமாவட்ட ஆயர் S. ஆரோக்யராஜ் , பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ், திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்பணி. அந்துவான் அடிகளார், கலந்துகொண்டார்கள்,
கல்லூரியின் முன்னாள் மாணவரும் பெங்களூரு கிறைஸ்ட் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை பேரா.பிரபின் வில்லரிஸ் குழுவினரின் கலைநிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும் கல்லூரி வளர்ச்சிக்கு கால் நூற்றாண்டுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை மற்றும் நடன, நாடகக் கலைஞர்கள், கலைக் காவிரி கலைத்தொடர்பக பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மக்களிசை கலைஞர் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி குழுவினரை தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் அறிமுகம் செய்தார்.நடனத்துறை உதவிப் பேராசிரியர்கள் திருமதி. முனைவர்.புவனேஸ்வரி, திருமதி. முனைவர்.லீமாரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கினர்.
