துறையூரில் 50 ஆண்டுகள் கழித்து படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுகள் கழித்து படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள் .
திருச்சி மாவட்டம் ,துறையூரில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியான ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1973-ம் ஆண்டு படித்து ,தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றிய முன்னாள் மாணவர்கள் , பள்ளியில் நடைபெற்ற விழாவில் சந்தித்து தங்களின் பள்ளிப் பருவ காலத்தின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
துறையூர் அருகே உள்ள ஊரில் இருந்து இப்பள்ளியில் கல்வி பயின்று , தற்போது இலங்கையில் தொழிலதிபராக உள்ள தியாகராஜ்சிவக்குமார் என்பவர் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வுக்காகவே வந்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தங்களது உயர்வுக்கு காரணமாக விளங்கிய முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்த முன்னாள் மாணவர்கள் ,அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற விழாவின் போது பள்ளியில் கல்வி மற்றும் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்புபரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
50 வருடங்களுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வு, தற்போதைய மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பையும், கல்வியில் சிறந்து விளங்கி முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
– ஜோஸ்
