
ஜல்லிகட்டு காளைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் DYFI சார்பில் மனு கொடுக்கும் இயக்கம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு
பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு தமிழகமே போராடி மீட்டுக் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திட அனுமதிக்க வேண்டுகிறோம். ஓராண்டு காலமாய் காளைகளை தயார் செய்து பல ஆயிரம் ரூபாய் பொருள் செலவு செய்து பாரம்பரியத்தை பாதுகாத்திட காளைகளை வளர்த்து வருகிற எங்களின் கோரிக்கைக்கு மதிப்பளியுங்கள்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஊருக்கு சொந்தமான கோயில் காளைகள் மற்றும் உள்ளூர் காளைகளை முன்னுரிமை கொடுத்து அவிழ்க்கப்படும்போது அதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவாகிவிடும் எனவே வெளியூரிலிருந்து வருகின்ற காளைகளும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணி முதல் 4 மணி வரை 2 மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதி வழங்கிடுக இதற்கேற்றார் போல் மருத்துவ கண்காணிப்பு குழு இருப்பதையும் உறுதி செய்திடுக.


காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதை தடுத்திட தள்ளுவாடி முறையை கைவிட்டு டோக்கன் வரிசைப்படி எவ்வித முறைகேடும் நடைபெறாமல் காளை மாடுகள் அடைப்பதை உறுதி செய்திடுக

ஜல்லிக்கட்டு காளை மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான டோக்கனுக்கு எந்த விதமான பணமும் பெறாமல் இலவசமாக வழங்குவதை உறுதி செய்திடுக. மேற்கண்ட கோரிக்கைகளை இறுதி செய்த பிறகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி வழங்கிடுக என அனைத்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.என காளை மாடுகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் DYFI சார்பில்மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
இது இயக்கத்திற்கு DYFI மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார், முன்னாள் மாநில துணைத்தலைவர் தோழர் வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாட்ஷா,ரோஜா ராஜன், தர்மா, பிரபாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
