NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

இந்தியாவின் பன்மைத்துவத்தைப் போற்றும் கல்லூரியின் கலை விழா மகிழ்வைத் தருகிறது !

0
1

இந்தியாவின் பன்மைத்துவத்தைப் போற்றும் கல்லூரியின் கலை விழா மகிழ்வைத் தருகிறது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2023 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் லெயோனார்டு அவர்களின் ஆசியுரையோடு தொடங்கிய இவ்விழாவின் தொடக்கத்தில் துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்

கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் ஜோ இருதயராஜ், அலுவலகர்கள் சங்கத் தலைவர் அமல்ராஜ், மாணவர் பேரவைத் தலைவா் கிளாடியன் ஸ்ரீதா் மற்றும் மாணவர் பேரவை குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.

3

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்துரையாற்றினார். தம் வாழ்த்துரையில் கல்வி மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக வளாகம் முழுவதிலும் சிறப்பான பயிற்சி எடுத்து இன்று அரங்கிற்கு வந்துள்ள மாணவர்களுக்கும், உற்சாகப்படுத்த வருகை தந்துள்ள மாணவர்களுக்கும் தம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகப் பதிவு செய்தார்.

4
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருச்சி சிவா‌ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவா் தம் உரையில், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பன்மைத்துவத்தைப் போற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கல்லூரியில் ஆதி தமிழனின் கலை, பண்பாட்டு விழுமியங்களை இந்தத் தலைமுறை உணர்ந்து வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுத்துள்ள இந்த கலை விழாவைத் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சமூகத்தை நேசிக்கிற, சமூகத்திற்காகப் பொறுப்புமிக்கவர்களாக எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குகிற இந்தியாவின் சில கல்வி நிறுவனங்களுள் ஒன்றான இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தினரை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் என்பதைப் பதிவு செய்து நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக மாறப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து அதற்காக திட்டமிட்டு உழையுங்கள் என்று மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்து தம் உரையை நிறைவு செய்தார்.

தொடக்க விழாவின் நிறைவில் நுண்கலைக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் விமல் ஜெரால்டு நன்றியுரையாற்றினார். மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர் கமல் பிரகாஷ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக் கலைவிழாவில் திருச்சி சிவா எம்.பி. பெருமிதம்

பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட பல போட்டிகள் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகின்றன.

இரண்டு நாள்களாக நடைபெறும் இவ்விழாவின் நிறைவு விழாவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார். இன்டெப் 2023 நிகழ்வை கல்லூரி, நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி, மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவா் மகேஸ்வரி, முனைவர் அருள் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.