திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் “கலையூறும் காவிரி” – 2023

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் “கலையூறும் காவிரி” – 2023 மூன்று நாள்கள் நடைபெறும் கலைவிழாவில் முதல் நாள் Dr.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr.செளம்யா பங்கேற்று வாய்ப்பாட்டு கச்சேரி வழங்கினார்.

கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ வரவேற்புரையாற்றினார், கவின்கலைப் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர குரலிசைக் கச்சேரி நிகழ்த்தினார், பக்கவாத்தியமாக மிருதங்கம் நெய்வேலி நாராயாணன், வயலின் திரு.கண்ணன் நிகழ்த்தினர், முதல்வர் முனைவர் ப.நடராஜன் நன்றியுரை வழங்கினார்.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார், நடனத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி நிகழ்வை தொகுத்து வழங்கினர். முனைவர் உமாமகேஸ்வரி, முனைவர் பானுமதி, முனைவர் சுனிதா நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
