NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

பொங்கல் கவியரங்கமும் நூல் வெளியீடும் !

0
1

பொங்கல் கவியரங்கமும் நூல் வெளியீடும்

இனிய நந்தவனம் வாசகர் வட்டம் , வாசவி கிளப் எலைக்ட் கப்புள்ஸ் இணைந்து நடத்திய பொங்கல் கவியரங்கம் மற்றும் நூல் வெளியிட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் 12 – 01 – 2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் ரத்திகா “கவிதை என்பது ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றும் போது பேசுகையில்கவிதை என்றால் என்ன என்பது ஒரு சிற்பியிடம் சிற்பம் என்றால் என்று கேட்பது போன்றது.  நம்முடைய மொழி எழுத்து வடிவத்துக்கு வந்த பிறகு முதன்முதலில் பிறந்தது செய்யுள் வடிவம்தான்
இலக்கியங்களும் முதன்முதலில் செய்யுள் வடிவமாகத்தான் படைக்கப்பட்டன.

கவிதை என்ற சொல் தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் இல்லை பா.என்று தான் இருக்கிறது கவிதை என்பது ஒரு ஆற்றல் ஒரு சக்தி என்றும் சொல்லலாம்.

4

மனிதன் காடுகளில் வாழ்ந்தபோது பாறைகளில் கொட்டியது தான் கவிதை கவிதை என்பத எழுச்சியூட்டும் சொற்களைக் கோர்த்து வரிகளாகக் கொடுப்பதே கவிதை. புதுக்கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை ஒசை இருந்தால் போதும் நவீன கவிதைகள் இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டன மரபுகளை உடைத்துவிட்டு உள்ளதை உள்ளபடி சொல்வதே நவீன கவிதை என்று கூறினார்.

பொங்கல் கவியரங்கமும் நூல் வெளியீடும்
பொங்கல் கவியரங்கமும் நூல் வெளியீடும்
3

விழாவில் கவிஞர் த.அனந்தராமன் எழுதிய “வசந்தத்தின் சுவடுகள்”என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது கவிஞர் ம.திருவள்ளுவர் தலைமையில் தமிழர் திருநாளில் புரட்சிப் பொங்கல் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் ஸ்ரீராம், கவிஞர் கவி செல்வா, கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், கவிஞர்கோவிந்தசாமி கவிஞர் ஜனனி அந்தோனி ராஜ், கவிஞர் த.அனந்தராமன் ஆகியோர் கவிதை பாடினர் நொச்சியம் சண்முகநாதன் தலைமை ஏற்றார் விஜிபி நிறுவனத் துணைத்தலைவர் இரா.தங்கயா முன்னிலை வகித்தார் வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் தலைவர் திவ்யா வீரமணி வாழ்த்துரை வழங்கினார்
நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க பி.தனபால் நன்றி கூறினார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.