திருச்சியில் தேசிய பசுமை படை மாணவர்கள் காற்று மாசு குறைத்தல் குறித்து பிரம்மாண்டமான விழிப்புணர்வு பேரணி !

திருச்சிராப்பள்ளி மாநகரில் தேசிய பசுமை படை மாணவர்கள் காற்று மாசு குறைத்தல் குறித்து பிரம்மாண்டமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையும் மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் பள்ளி கல்வித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்ட நிர்வாகமும் இணைந்து 15 வது நிதி குழு 2021 2022 இன் படி காற்று மாசு தடுத்தல் என்ற கருப்பொருளை மையமாக வைத்து திருச்சி மாநகரில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு காற்று மாசு குறைத்தல் தடுத்தல் வேண்டும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்று 350 க்கு மேற்பட்ட மாணவர்களும் 50க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சியானது நடைபெற்றது இதில் தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் திரு மதிப்புமிகு விஜேந்திரன் மற்றும் திருமதி ஆண்டாள் ராஜ்குமார் ஸ்ரீரங்க மண்டல தலைவர் இவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியரும் தேன்மொழி ஆசிரியரும் வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாகியும் லால்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி இதில் கலந்து கொண்டார். திருச்சிராப்பள்ளி தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு ஐ சகாயராஜ் கருத்துரை ஆற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் இவருடன் லூயிஸ் பட்டதாரி ஆசிரியர் கூடன் இருந்து பல்வேறு விதமான செயல்முறை நடவடிக்கைகள் இவற்றை மேற்கொண்டார் நன்றியுறையும் ஆற்றினார்.
காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் திருமிகு நிவேதா லட்சுமி மற்றும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜேந்திரன் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு மீனாசோட்சனி, உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் திமுக ரவி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணியானது திருச்சி மாநகரில் அன்று 13/12/2022 தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முடிக்கப்பட்டது. 10.1 2023 ஆர் சி மேல்நிலைப்பள்ளி பேரணி ஆரம்பிக்கப்பட்டு சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிக்கப்பட்டது.
11 12 2023 அன்று திருச்சி மாநகரின் மேயர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வெஸ்ட் புத்தூர் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் முடிக்கப்பட்டது 12.1. 2023 இன்று நான்கு நான்காவது பகுதியாக ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேரணி ஆரம்பிக்கப்பட்டு ராஜகோபுரம் வழியாக பேரணி சென்று மீண்டும் ஸ்ரீரங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
