NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி அருகே 850 கிலோ கடத்தல் குட்கா பறிமுதல் – எஸ்பி தனிப்படையினர் அதிரடி!

0
1

திருச்சி அருகே 850 கிலோ கடத்தல் குட்கா பறிமுதல் – எஸ்பி தனிப்படையினர் அதிரடி!

திண்டுக்கலுக்கு பெங்களூருவில் இருந்து ஈச்சர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக எஸ்பி பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி தனிப்படையினர் சிறுநாயக்கன்பட்டி அருகே கரட்டழகன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

4

அவ்வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஈச்சர் லாரியை ஓட்டி வந்த மதியழகன்(32), அப்பாஸ்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

குட்கா கடத்தி வரப்பட்ட ஈச்சர் லாரி
குட்கா கடத்தி வரப்பட்ட ஈச்சர் லாரி

மேலும், கடத்தி வரப்பட்ட 850 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்பாத்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.