
திருச்சி பொங்கலை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையம் !
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வருகின்ற ஜனவரி 15 தேதி கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.
வெளியூரில் தங்கி வேலை செய்யவர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு புறப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து பெரும் நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 க்கும் ஏற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


மேலும் வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்கு சிரமம் இன்றி பயணம் மேற்கொள்வதற்காக
திருச்சியில் மன்னார்புரம் பகுதியில் மதுரை மார்க்கம்,
-இலுப்பூர் சாலையில் – புதுக்கோட்டை மார்க்கம்,
வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சாவூர் மார்கம்,
ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
