
திருச்சியில் பொங்கல் பண்டிகையொட்டி களைகட்டும் பூ வியாபாரம்! மல்லிகை பூ ரூ.1700
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டும் வருகின்ற ஜனவரி 15 ந் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வமுடன் தேவையான பொருட்களை வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.

இந்த பொங்கல் திருவிழாவில் வீட்டில் மஞ்சள், பனங்கிழங்கு, கரும்பு, சர்க்கரை பொங்கல் வைத்து கடவுளை வழிபடுவார்கள். அதேபோல் கோலப்பொடி, மண்பானை,வீட்டின் வளர்க்கும் பசுவுக்கு தேவையான கயிறு, சங்கிலி, வாங்குவது வழக்கம்.
இதுஒருபுறம் இருக்க, பண்டிகை என்றாலே பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது பூ சீசன் இல்லாத காரணத்தால் பூக்கள் விலையை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக பூக்களின் அரசி என கூறுப்படும் மல்லிகை பூ கிலோ ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ ரூ.1200-க்கும், ஜாதிப்பூ ரூ.1200-க்கும் காக்க ரட்டான் பூ ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக பண்டிகை வருவதால், பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.
