NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா !

0
1

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2023 நுண்கலை விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். கல்லூரி நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய நிகழ்வில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் திண்டுக்கல் ஐ லியோனி இருவரும் பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நுண்கலைக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்
நுண்கலை விழா 2023 நிறைவு விழா

நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல், இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தினர். ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் ஜோ இருதயராஜ், அலுவலகர்கள் சங்கத் தலைவர் அமல்ராஜ், மாணவர் பேரவைத் தலைவா் கிளாடியன் ஸ்ரீதா் மற்றும் மாணவர் பேரவை குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.

3
4

சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் ஐ லியோனி தமது சிறப்புரையில், சமயத்திற்கும் கலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது இந்த திருச்சிராப்பள்ளி மண்தான். எனவே எந்தத் தடைகளையும் பாராது அவற்றைத் தகர்த்து நீங்கள் முன்னேற வேண்டும். பாட்டும் பேச்சும் கலந்த நடையை எனது பாணியாக நான் உருவாக்கி நான் எப்படி வெற்றி பெற்றேனோ, அதைப்போல இங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகளை உருவாக்கி அதில் வெற்றி பெற வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை தமக்குரிய நகைச்சுவை மற்றும் பாடல் கலந்து உரையாற்றி மகிழ்வித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா‌ தம் வாழ்த்துக்களை மாணவர்களுக்கு மாணவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா

மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர் கமல் பிரகாஷ் எழுதிய உதிர்ந்த சருகின் ஓசை என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. நூல் குறித்த அறிமுகத்தை முனைவர் விமல் ஜெரால்டு வழங்கினார்.

கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற கலைப் போட்டிகளில் வென்ற மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் பணிமுறை ஒன்றில் தாவரவியல் துறையும், பணிமுறையில் இரண்டில் ஆங்கிலத்துறையும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். நிறைவில் நுண்கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி நன்றியுரையாற்றினார். மாணவப் பேரவை மாணவிகளின் பிரதிநிதி மாணவி வித்யா ஸ்ரீ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2023 நிறைவு விழா

துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், துறை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவத் தலைவர்கள், மாணவ மாணவியர் ஆகியோரின் ஒத்துழைப்போடு கல்லூரி நுண்கலை விழா சிறப்பாக நிறைவு பெற்றது. அனைத்து நிகழ்வுகளையும் கல்லூரி நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி, மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவா் மகேஸ்வரி, முனைவர் அருள் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.