
திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியும் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய கலையூறும் காவிரி – 23 கலைவிழா இரண்டாம் நாளில் திருமதி ராதிகா வைரவேலன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
பக்கவாத்தியம் மிருதங்கம் திரு.பிரேம்குமார், வயலின் முனைவர் ஆக்னஸ் சர்மீனி குழலிசை பேரா.பிரகாஷ், ரிதம் பேட் ஜோயல் குரு, முகர்சிங் யோகேஷ் ஆகியோர் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மந்திரி குமார் குழுவின் “கணியன் கூத்து மகுட ஆட்டம் நடைபெற்றது.


மூன்றாம் நாள் தஞ்சாவூர் திரு.விஜயகுமார் அவர்களின் ‘உதிரி , நாடக நிலம் குழு சார்பில் “நாடி” நவீன நாடகம் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி.திரு. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார்.


மூன்று நாள்கள் இயல், இசை, நாடகமாய் அமைக்கப்பட்ட நிகழ்வை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார், நடனத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினர்.
முனைவர் உமா மகேஸ்வரி, முனைவர் சுனிதா முனைவர் பானுமதி
ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
