திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் பொங்கல் விழா..!

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் பொங்கல் விழா..
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகளுக்கான கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் தனி திறமைகளை வளர்த்திடும் விதமாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனி கவனம் எடுத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.


இப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் கவிதா விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு ரமேஷ் பங்கேற்றார் .
விழாவை ஒட்டி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள், தனித்திறன் நிகழ்ச்சிகள் ,மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.
