மாநகர காவல் ஆளிநர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா, இ.கா.ப.,

திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா, இ.கா.ப., ‘பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடமாநகரம் முழுவதும் சுமார் 1500 காவல் ஆளிநர்கள் பாதுகாப்புபணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின்; நலன் கருதியும், திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் மூன்று இடங்களில் தற்காலிகபேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் (14.01.2023)-ந்தேதி,திருச்சி மாநகரகாவல் ஆணையர் மாநகர காவல் ஆளிநர்களுடன் பொங்கல் பண்டிகையைகொண்டாடவேண்டி “பொங்கல் விழா” திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இவ்விழாவில் காவல் துணைஆணையர்கள், தெற்கு,வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் காவல் ஆணையர் மாநகரஆயுதப்படை,காவல் உதவி ஆணையர்கள் நுண்ணறிவுப்பிரிவு ,கே.கே.நகர் சரகம் மற்றும் ஆயுதப்படைகாவல் ஆளினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவல் ஆளிநர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 20 மீட்டர் ஒட்டம், 25 மீட்டர் ஒட்டம்,100 மீட்டர் ஒட்டம், Slow Cycle ஒட்டம், Shot put ,கபடி,மியூச்சிக்கல் சேர் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

திருச்சிமாநகரகாவல் ஆணையர் பேசுகையில், திருச்சி மாநகர காவல்துறையினர் பல்வேறு பனிசுமைக்கு இடையிலும் இப்பொங்கல் விழா ஏற்பாடு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், காவல் ஆளிநர்களின் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று இருப்பதை பார்க்கும் போது அவர்களிடம் பல திறமையை உள்ளதாகவும், அதனைகண்டறிந்து அவரது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும், இப்பொங்கல் திருநாளில் திருச்சி மாநகரகாவல் ஆளிநர்கள்; தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
