திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியரின் 37 வது நூல் வெளியீடு !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியரின் 37 வது நூல் வெளியீடு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத். இளைஞர்களுக்கு ஆளுமை மாதிரிகளை அடையாளப்படுத்தும் பல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இவருடைய முப்பத்தி ஏழாவது நூலான ஆதன் என்கிற நூல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் இன்று வெளியிடப்பட்டது. திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் வெளியிட ஹைக்கூ கவிதையைத் தமிழுக்கு முதலில் அறிமுகப்படுத்திய ஓவியக்கவிஞர் அமுத பாரதி பெற்றுக்கொண்டார்.


பாலசாகித்திய அகாடெமி விருதாளர் கவிஞர் மு.முருகேஷ் வாழ்த்துரை வழங்கினார். திண்டுக்கல் வெற்றி மொழி வெளியீட்டக நிறுவனர் இரா. தமிழ்தாசன், ஆசிரியை மெர்சி டயானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நூலாசிரியர் முனைவர் ஜா.சலேத் அண்மையில் நந்தவனம் பவுண்டேஷன் வழங்கிய நம்பிக்கை நாயகன் 2023 விருதையும், உனக்கு நீயே விளக்கு என்ற நூலுக்கு ரூபாய் 5000 பொற்கிழிப் பரிசையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
