NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

உப்பிலியபுரம் சாலை அருகில் குவிந்து கிடக்கும் குப்பை ! தொற்றுநோய் அபாயம் ! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் !

0
1

உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம் ! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கொப்பம்பட்டி ஊராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், அதே பகுதியில் தீ வைத்து எரியும் குப்பைகளின் புகையாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை
உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கொப்பம்பட்டி ஊராட்சி . இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் , அனைத்து பகுதிகளிலும் பெறப்படும் குப்பைகளை தூய்மைப்பணியாளர்கள் ,மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து, குப்பைகள் தரம் பிரிக்கும் கொட்டகையில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றியும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி முறையில் மாற்றம் செய்து விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வருவாய் வரக்கூடிய சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொப்பம்பட்டியில் உள்ள அனைத்து குப்பைகளையும் முத்தையம் பாளையம், நாகநல்லூர் செல்லும் சாலை ஓரத்தில் மலைபோல் கொட்டி வைத்து நாளடைவில் சாலையின் பெரும் பகுதியை குப்பைகளால் ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.

உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை
உப்பிலியபுரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை
3
4

அதில் ஒரு பகுதி குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து விடுவதால் , அதிலிருந்து வெளியேறும் புகையால் , அந்தப் பகுதி வழியாக தங்களது வயல்களுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்லும் விவசாயிகள், பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகள் , இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலானோர் மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் அதன் அருகிலேயே குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் சுவாசக்கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்குள்ளாக வேண்டிய அவலநிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக அப்புறப்படுத்திட கொப்பம்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– ஜோஸ்

நம்ம திருச்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம திருச்சி  வாட்ச் ஆப் குழுவில் இணைந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இணைந்து கொள்ளுங்கள்.. 

https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.