அதிகாரம் என்பது ஆட்சி செலுத்துவது அல்ல, அரவணைப்பது, அன்பு செலுத்துவது – கல்லூரி விழாவில்… பேராசிரியர் கி. சதீஷ்குமார் !

அதிகாரம் என்பது ஆட்சி செலுத்துவது அல்ல, அரவணைப்பது, அன்பு செலுத்துவது – கல்லூரி விழாவில்… பேராசிரியர் கி. சதீஷ்குமார் !
நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம் மகளிர் மேம்பாட்டுத்துறை மற்றும் நுண்கலைப் பண்பாட்டுத்துறை இணைந்து 7 5வது குடியரசு தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ்குமார் கலந்து கொண்டு “பெண் அதிகாரம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரையில் பெண் அதிகாரம் என்பது வெற்றுச் சொல்லாக வாக்கியமாக இல்லாமல் நடைமுறை வாழ்வியல், சமூகவியல், அரசியல், ஆட்சி முறைகளில் , அதிகாரப் பரவலாக்கமுறைகளில் நடைமுறைக்கு கொண்டு வருவதே கல்வியின் நோக்கமாக வேண்டும். ஆதி தொல்குடி சமூகம் தொடங்கி இன்றுவரை உயிரினங்களில் தலைமை தாங்குவது, வழிகாட்டுவது, பாதுகாப்பது பெண்ணினம் தான்.



மழைக் காடுகளையும் சோலைக்காடுகளையும் யானை பாதுகாப்பது போல புவிப் பந்தின் மானுட சமூகத்தைப் பேணிக்காப்பவள் பெண். அதிகாரம் என்பது ஆட்சி செலுத்துவது அல்ல, அரவணைப்பது, அன்பு செலுத்துவது , பாலினப் பாகுபாடின்றி பாதுகாப்பது அவையாவுமே பெண்மையின் அதிகாரமாய் பல்வேறு பரிமாணங்களில் விரிகிறது. மண்ணைப் பாதுகாத்து உயிர்ப்பித்து காலத்தை ஆளும் மையமே பெண். என்றார்.
விழாவிற்கு முனைவர் S.செந்தில்வேல் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் J.லலிதா தலைமை உரை ஆற்றினார். நுண்கலை ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர். ஜா. ஸ்டாலின் செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார்..
– கி.ச
உங்களுடைய கல்லூரி நிகழ்ச்சிகள் நம்ம திருச்சி இதழிலில் இடம்பெற… 9488842025 என்கிற எண்ணிற்கு அழைக்கவும்..
நம்ம திருச்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்ம திருச்சி வாட்ச் ஆப் குழுவில் இணைந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இணைந்து கொள்ளுங்கள்..
https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
விரிவான செய்திக்கான லிங் முதல் கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்படுள்ளது…
