கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் திருச்சி அரசுப் பொருட்காட்சி மிஸ் செய்து விடாதீர்கள்?

கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் திருச்சி அரசுப் பொருட்காட்சி மிஸ் செய்து விடாதீர்கள்?
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்டரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 8 அரசு சார்பு நிறுவனங்களின் என மொத்தம் 34 கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 45 நாட்களாக மிகச்சிறப்பாக நடைபெற்ற திருச்சி அரசுப் பொருட்காட்சியினை கடந்த ஒரு வாரத்தில் பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 7ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 27.02.2023 திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது. அரசுப் பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறும் எனவே, பொதுமக்கள் குடும்பத்தோடு வருகை தந்து இப்பொருட்காட்சியினை கண்டுகளிக்கலாம்.
