திருச்சியில் முதன்முறையாக கர்ப்பிணிகளுக்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி!

திருச்சியில் முதன்முறையாக கர்ப்பிணிகளுக்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி!
திருச்சியில் முதன்முறையாக, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை இன்று (22.01.2023) அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்வில், டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் சுப்பிரமணி, டாக்டர் சாந்தி, டாக்டர் ரமேஷ் பாபு, முகேஷ் மோகன், டாக்டர் ஷர்மிளி பிரசில்லா கலாமணி, டாக்டர் மாலதி பிரசாத், வெள்ளைச்சாமி, கமலம் கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி மையத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இந்நிகழ்வில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவத்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்து வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை, சமீபத்தில் திருச்சியிலேயே முதன் முறையாக 24 சேனல்கள் கொண்ட பிரேக்கிதெரபி உள்கதிர்வீச்சு கருவியை அறிமுகப்படுத்தியது.


தற்போது, திருச்சியிலேயே முதன்முறையாக அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வால்யூசன் எக்ஸ்பர்ட் வியூபாய்ண்ட் 6 என்னும் அல்ட்ராசவுண்ட் கருவியினை அறிமுகப்படுத்துகிறது. கரு மற்றும் தாயை பாதிக்கும் பல்வேறு மரபணு கோளாறுகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை முன்கூட்டியே செயல்படுத்த வழிவகைசெய்ய முடியும்.
கருவுற்றது முதல் பிறக்கும் வரை கருவின் குறைபாடுகள், கருவின் வளர்ச்சி, கருவில் செய்யக்கூடிய செயல்முறைகள், மரபணு கோளாருகளுக்கான தீர்வுகள் ஆகியவை இந்த ஸ்கேன் மையம் மூலம் செய்யப்படும். தொடக்க சலுகையாக 50% வரை அதிநவீன ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார். இச்சலுகை பிப்ரவரி மாதம் முழுவதும் வழங்கப்படும்.
மேலும் தொடக்க விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பல்வேறு சிறப்பு துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் டாக்டர்.ல் ஹரிஷ்குமார், டாக்டர் ஷ்யாமிலி, டாக்டர் ஷேக் அப்துல்லா, டாக்டர் மகேஸ்வரன், டாக்டர் சந்தோஷ், டாக்டர் தீபன்,டாக்டர் ஹரீஷ், டாக்டர்.கஸ்தூரி, டாக்டர் முரளிதரன், டாக்டர் ரேவதி,டாக்டர் குணசேகரன் பங்கு கொண்டு இலவச ஆலோசனை செய்தனர்.
தேவைப்படுபவர்களுக்கு அதிக விலையுள்ள பரிசோதனைகளான மார்பக மேம்மோகிராம் தெர்மோகிராம் (மார்பக பரிசோதனை) பாப்ஸ்மியர் எனப்படும் கருப்பை வாய் பரிசோதனை பி.எப்.டி எனப்படும் நுரையீரல் செயல் திறன் பரிசோதனை, பி.எம்.டி எனப்படும் எலும்பு வலிமை பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய்களுக்கான பரிசோதனைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டன.
இதில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். தொடக்க விழாவின் இறுதியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சசிப்பிரியா கோவிந்தராஜ் நன்றியுரையாற்றினார்.
