ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் 24ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் !

ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் 24ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் !
மோட்டார் வாகனதிருத்த சட்டத்தை கைவிட கோரியும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், நான்கு சட்ட தொகுப்புகளையும் எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் ஏஐடியூசி தொழிற்சங்கம் ஜனவரி 24 நூற்றுக்கணக்கான மையங்களில் மறியல் அறப்போராட்டத்தை நடந்த திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறும் மறியல் கோரிக்கைகளை விளக்கி திருச்சி சர்வதேச விமான நிலைய ஏஐடியுசி தலைமையிலான டாக்ஸி ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் சங்கத்தின் துணைச் செயலாளர் விஜயராஜன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இன்று (22.01.2023) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சக்தி முன்னிலையில் ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொது செயலாளர் க. சுரேஷ், தலைவர் நடராஜா டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தின் கௌரவ தலைவர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் பால் கிருஷ்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாணவர் பெருமன்றம் ஜெய்லானி நன்றி கூறினார்.
