ஹோலி கிராஸ் கல்லூரியில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் ஆளுமைத்திறன் நிகழ்ச்சி !

ஹோலி கிராஸ் கல்லூரியின் பாலின சமத்துவ சங்கத்தை சேர்ந்த மாணவியர்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் ஆளுமைத்திறன் என்ற நிகழ்ச்சி 21 1.2023 ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர். அருட்சகோதரி. முனைவர் . கிறிஸ்டினா ஃபிரிஜிட் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசியக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் முனைவர். எஸ். கருத்தான் கலந்து கொண்டு, பேசிய போது, சங்க இலக்கியங்களில் பெண்கள் தவறு செய்யவில்லை என நிரூபிக்க நடந்த நிகழ்வுகளையும் சமூகம் சிலவற்றை தவறாக புரிந்து கொண்டதையும் எடுத்துரைத்தார்.


பல ஆண்களின் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருக்கின்றார்கள். மேலும் தாமஸ் ஆல்வா எடிசனை அவரது ஆசிரியர் கல்வி கற்க தகுதியற்றவர் என்று கூறியதையும் அவரது தாயார் அவரை ஊக்குவித்து ஒரு அறிவியல் அறிஞர் அறிஞராக மாற்றியதையும் எடுத்துக்காட்டாக கூறினார்.
ரோசாப்பர்க் என்னும் பெண்மணி பயணச்சீட்டு பெற்றும் பேருந்தில் பெண்கள் பயணிக்க கூடாது என தடுத்தவற்றையும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் கூறினார். சமூகத்தில் மிகப் பணக்காரர்களாக உள்ள பெண்களே போதுமான சுதந்திரம் பெற்றுள்ளதாகவும் பெருவாரியான பெண்கள் இன்றும் பொறுப்பில்லாமல் செயல்படும் கணவருக்கு உணவு அளிக்க காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளனர். என்று பேசினார்.

முன்னதாக இளங்கலை முதலாம் ஆண்டு கணிதவியல் மாணவி செல்வி. பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார். முடிவில் இளங்கலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி செல்வி. நளாயினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்களான முனைவர். சரண்யா மற்றும் செல்வி. சா. ஐரிஸ் ரீபா செய்திருந்தனர்.
