
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள்!
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று (24.01.2023) நடந்தது.

மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா வரவேற்றார். விழாவில் மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, அமைப்புச்செயலாளர் ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் வனிதா, பகுதி செயலாளர் பூபதி, ஏர்போர்ட் விஜி, அன்பழகன், நாகநாதர் பாண்டி, இன்ஜினியர் ராஜா, வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், கன்னியப்பன்,கவுன்சிலர் அம்பிகாபதி, கருமண்டபம் பகுதி
டி ஆர் சுரேஷ் குமார் வண்ணார்பேட்டை ராஜன், ரவீந்திரன்,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் கயிலை கோபி நன்றி கூறினார்.
