
திருச்சியில் ஆட்டோ மொபைல் ஷோரூம் பெண் ஊழியர் திடீர் மாயம்!
திருச்சி பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவரது மகள் பிரியா வயது (20). இவர் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ மொபைல்ஸ் ஷோரூமில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜ்குமார் மகளை கண்டித்தார். இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவர் காதலுடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜ்குமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ப்ரியாவை தேடி வருகின்றனர்.
