அனாதை பிரதேங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி குடும்பத்தினருக்கு இயற்கை மற்றும் மனிதநேய விருது

அனாதை பிரதேங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினருக்கு
இயற்கை மற்றும் மனிதநேய விருது

சமூகத் தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான ஆறாவது தேசிய மாநாடு திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம்., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தார்மீக ஆராய்ச்சி மற்றும் ஆதார அறக்கட்டளை – இந்தியா, சேவக்-ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி சொசைட்டி, கற்பக விருட்சம் அறக்கட்டளை, அன்புடன் அறம் செய் அறக்கட்டளை, பசுமை தேசம்
நான்கு கோடி மரம் நடும் திட்ட ஒருங்கிணைப்பு குழு, அரசு சாரா அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்களின் குடும்பங்கள் சார்பில் மயான பூமியில் மனைவி மகளுடன் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா உள்ளிட்டோர் சமூகத்திற்கான சிறந்த சேவை புரிந்து வருவதைப் பாராட்டி யுனிவர்சல் கான்சியஸ்னெஸ் சேவக் சொசைட்டியின் நிறுவனர் ஒரே உலகம் ஒரு குடும்ப சமூகம் குருஜி ஆச்சார்யா வினய் வினேகர் தலைமையில் நான்கு கோடி மரம் நடும் திட்ட ஒருங்கிணைப்பு குழு விவேகானந்தன் “நேச்சர் & ஹுமானிட்டி விருது 2023” வழங்கினார்.
