
திருச்சி பாத்திரக்கடையில் திருட்டு! முன் விரோதத்தில் கொள்ளையடித்ததாக புகார்!
திருச்சி பெரியகடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் அன்குராஜ் வயது (50). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள நபருக்கும் இடையே நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் நிலம் பிரச்சினை காரணமாக தனது கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 4 லட்சம் பணம் மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பித்தளை மற்றும் வெண்கல பாத்திரங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அங்குராஜ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் ஆறுமுகம் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
