காவேரி பெண்கள் கல்லூரி சார்பில் ஆங்கில மாரத்தான் -2023

காவேரி பெண்கள் கல்லூரி சார்பில் ஆங்கில மாரத்தான் -2023
ஆங்கில இலக்கிய துறையின் அரோரா மன்றம் 2023 சார்பில் ஆங்கிலம் மாரத்தான் 2023 நடைபெறுகிறது. இந்த போட்டி பல சுற்றுகள் மூலம் ஆங்கிலம் கற்கும் ஓரு செயல்பாடு. ஆகும். மாரத்தான் போட்டியை கல்லூரி முதல்வர் சுஜாதா கொடி அசைத்து துவங்கி வைத்தார். முதல்வர் தனது உரையில் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் விளைவாக தன்னம்பிக்கை மற்றும் ஆங்கில மொழி கற்று மேம்படும் என்று பேசினார்.


ஆங்கிலம் மாரத்தானின் அனைத்து சுற்றுகளையும் மாணவர்களுக்கு அறியும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று குறிக்கோளோடு ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் மாணவர்கள் புதையல் வேட்டை, குழப்பமான சொற்கள், ஆங்கில ட்ரான்ஸ் கிரிப்ஷன்கள், சொற்களைப் பொருத்து, நேர்காணல் – உங்கள் சிறந்த நண்பர்களை புரிந்து கொள்ளுங்கள், புதிர்கள், பிரபலங்களின் நேர்காணல், புத்தக விமர்சனம் மற்றும் வார்த்தைகளை உருவாக்கு, போன்ற ஒன்பது சுற்றுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர் .
மாணவர்களின் செயல் திறன் அடிப்படையில் 191 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 21.01.2023 முதல் 27 .01 2023 வரை போட்டி சுற்றுகள் நடத்தப்படுகிறது . ஒவ்வொரு சுற்றிலிருந்தும் பட்டியலிட்ட மாணவர்கள் அடுத்து சுற்றுக்கு அடியெடுத்து வைப்பார்கள். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு ரூ1000, இரண்டாவது பரிசு ரூ 750 மற்றும் மூன்றாவது பரிசு ரூ 500 என்று அறிவிக்கப்பட்டது . மேலும் பங்கேற்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பபடுகிறது.

–
நம்ம திருச்சி இதழில் உங்கள் கல்லூரி நிகழ்ச்சிகள் இடம்பெற businesstrichy2022@gmail.com என்கிற மெயிலுக்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்...
