
திருச்சி விமான நிலையத்தில் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது!

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 28). இவர் ஏர்போர்ட் பகுதியில் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் விமான நிலையம் அருகில் முல்லை நகர் ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக ஹக்கீம் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்தில், டிரைவரிடம் பணம் பறித்த திருச்சி மாத்தூர் ரவுண்டானா இந்திரா நகர் சத்யா நகர் பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் ( 22 ), கரூர் குளித்தலை பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26 )ஆகிய இரண்டு பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
