
திருச்சி பாலக்கரையில் பழைய பேப்பர் குடோனில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 45). இவர் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் பழைய பேப்பர் குடோன் வைத்துள்ளார்.வழக்கம் போல் இரவு குடோனை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது குடோனின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கல்லாப் பட்டியை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
