
திருச்சி இளைஞர் மதுவால் உயிரிழந்த சோகம் !
திருச்சி கிராப்பட்டி கான்வென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சார்லி என்கிற சார்லஸ் (வயது 53) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் அவர் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

பின்னர் வழக்கம் போல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சார்லஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையே மறுநாள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் வராண்டாவில் அவர் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக அவரது சகோதரர் கோவிந்தராஜ் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
