ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தின ஊதியம் வேண்டி மின்வாரிய எம்ப்ளாய்ஸ் ஃபெடரேஷன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தின ஊதியம் வேண்டி மின்வாரிய எம்ப்ளாய்ஸ் ஃபெடரேஷன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சேக்கிழார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் 2019 டிசம்பர் மாதம் முதல் 20 சதவீத ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும், 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொதுப்பணித்துறைக்கு இணையாக மின்வாரியமே நேரடியாக தின ஊதியம் வழங்க வேண்டும், கள உதவியாளர்கள், ஐடிஐ, கணக்கீட்டாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும், கேங்மேன் பணிக்கு தேர்வான 5000 பேருக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் பாஸ்டின்ராஜ், அமைப்பு செயலாளர் நாராயணமூர்த்தி, செயல் தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பின் திருச்சி திட்ட செயலாளர் சிவசெல்வன் நன்றி கூறினார்.
படவிளக்கம்:
திருச்சியில் நடந்த மின்வாரிய எம்ப்ளாய்ஸ் ஃபெடரேஷன் மாநில செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சேக்கிழார் பேசினார் அருகில் சங்க நிர்வாகிகள்
ஜெயராமன்,
சிவச்செல்வன், மணிகண்டன், பாஸ்டின்ராஜ், நாராயண மூர்த்தி ஆகியோர்.
